உம்மை காண வாஞ்சிக்கிறேன்

 

உம்மை காண வாஞ்சிக்கிறேன்

இயேசையா, இயேசையா..(2)

 

பதினாயிரங்களில் சிறந்தவரே

பழுதொன்றும் இல்லாதவரே-(2)

பூரண அழகுள்ளவரே

காட்டுமே உம்முக ரூபத்தை (2)

                 இயேசையா, இயேசையா..(2)    -உம்மை

 

தலை தங்கமயமானவரே

கண்கள் புறாக்கண்கள் போன்றவரே(2)

சாரோனின் ரோஜா லீலிபூஷ்பமே

காட்டுமே உந்தன் சாயலை(2)

                இயேசையா, இயேசையா..(2)     -உம்மை

 

உதிக்கும் நீதியின்   சூரியனே

பிரகாச விடிவெள்ளி நட்சத்திரமே(2)

நிலையங்கி பொற்கச்சை தரித்தவரே

உம்மலர்ந்த முகத்தை காட்டுமே(2)

 

                இயேசையா,  இயேசையா..(2)

                                                                                -உம்மை